search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை மருந்தகம்"

    • அமைச்சர் புதிய கால்நடை மருந்தகங்களை திறந்து வைத்தார்.
    • துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் ரூ. 121.50 லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரகுராமன் கலந்து கொண்டார்.

    விழாவில் அமைச்சர் கூறியதாவது:-

    நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும். அதற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்க ளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் அதிக அளவில் கால்நடைகளை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் விதமாக வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, ஆனைக்குட்டம், சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், திருவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் தலா ரூ. 40.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 121.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 கி.மீட்டருக்குள் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க அனுமதியில்லை என்ற சூழல் இருந்தது.
    • ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் இருக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரியில் கால்நடை மருந்தகம் இல்லாததால் 5 கி.மீ., தூரத்திலுள்ள அவிநாசி அல்லது சேவூர் செல்ல வேண்டியுள்ளது. எனவே நடுவச்சேரியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கால்நடை வளர்ப்போர் முன்வைத்திருந்தனர். இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது:-

    ஏற்கனவே கால்நடை மருத்துவமனை உள்ள இடத்தில் இருந்து 8 கி.மீட்டருக்குள் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க அனுமதியில்லை என்ற சூழல் இருந்தது. தற்போது இந்த எல்லை 5 கி.மீ., என சுருக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நடுவச்சேரியில் இருந்து அவிநாசி மற்றும் சேவூர் கால்நடை மருத்துவமனைகள் 5 கி.மீட்டருக்குள் உள்ளன.இதனால் நடுவச்சேரியில் கால்நடை மருந்துவமனை அமைக்க வாய்ப்பில்லை. அதேபோல் கால்நடை மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் இருக்க வேண்டும். இருந்தபோதிலும் நடுவச்சேரியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வாய்ப்புள்ளது.இதுகுறித்து கால்நடை வளர்ப்போர், துறை துணை இயக்குனருக்கு கோரிக்கை விடுக்கலாம்.

    • ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    ஆலங்குடி, தேவகோட்டை, பனங்குடி, பி.நெற்புகப்பட்டி, நடராஜ புரம் மற்றும் செம்பனூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், ஆலங்குடி ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய மருந்தகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் 20 பயனாளி களுக்கு செறிவூட்டப்பட்ட தாதுஉப்பு கலவை மற்றும் 20 பயனாளிகளுக்கு நீண்ட கால பயன்பாட்டிற்கு நறுக்கிய பசுந்தீவன 40 கிலோ எடை கொண்ட புல் மூட்டைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாக நாதன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் சொர்ணம் அசோகன் (கல்லல்), சண்முகவடிவேலு (திருப்பத்தூர்), மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் செந்தில்குமார், உதவி இயக்குநர் பாலசுப்பி ரமணியன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளா; ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், இளங்கோ வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தச்சன்விளை கால்நடை மருந்தகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.
    • உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

    தூத்துக்குடி

    சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் கால்நடை மருந்தகம் கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

    இதனால் தச்சன்விளை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை போட்டு பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தச்சன்விளை கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப் படாமல் இருப்பதால் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.

    கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போட அப்பகுதி மக்கள் திசையன்விளையில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு பெரும் சிரம ங்களுக்கு இடையே கொண்டு சென்று வருகிறார்கள்.இதனால் விவசாயிகள் தங்களது பணிகளை விட்டுவிட்டு சென்று வருவதால் அவர்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

    மழைக்காலங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பொது மக்களும் விவசாயி களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் கூடுதல் பொறுப்பாக தச்சன்விளை கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வாரத்தில் ஓரிரு நாட்கள் வந்து செல்கிறார்.

    ஆனால் விவசாயிகள் பணிகளை முடித்து விட்டு கால்நடை மருத்துவ மனைக்கு தங்களது கால்நடைகளை கொண்டு செல்லும் போது பெரும்பாலும் கால்நடை மருந்தகம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    எனவே தச்சன்விளை சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கால்நடை மருத்தகத்தில் நிரந்தரமாக கால்நடை மருத்துவர் பணியில் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×